Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் பிரதமர் ஆன ரிஷி சுனக்… முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து…!!!!

இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்திய வம்சாவளி ரிஷி சுனகிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை பொருத்தமட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்பவரே நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுகின்றார். அந்த வகையில் இங்கிலாந்தில் மிக இளம் வயது பிரதமராக 42 வயதான தேர்வாகி இருக்கிறார்.

இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இங்கிலாந்தின் பிரதமர் தேர்தல் நடத்தும் 1922 குழு என்று அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் லண்டனில் உள்ள 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்த ரிஷி சுனக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |