இங்கிலாந்தில் வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை மக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசந்தகாலம் தொடங்கியதன் எதிரொலியாக மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலையும் நிலவி வருகிறது. கடந்த மாதம் வரை பனிப்பொழிவு கொட்டித் தீர்த்து கடும் குளிர் நிலவி வந்துள்ள, சூழ்நிலையில் தற்போது வசந்த காலம் தொடங்கி 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்ப நிலை காணப்படுகிறது. இந்த சீதோஷ்ணம் பொதுமக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிதமான வெப்பத்தில் மத்தியில் லண்டன் தேம்ஸ் நதியின் அழகிய தோற்றத்தைக் காட்டும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.