Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கிலாந்தில் நாட்டிலிருந்து பரிசு பொருட்கள்…. “73 லட்ச ரூபாயை இழந்த எஸ்டேட் உரிமையாளர்”…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி….!!!!

மூதாட்டியிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் தான் இங்கிலாந்தில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் மூதாட்டியிடம் எனது மகள் உங்களுக்கு பரிசு அனுப்ப விரும்புகிறாள் என கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடமிருந்து பரிசுகளைப் பெற விரும்பினார். இந்நிலையில் மூதாட்டிக்கு ஒருவர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உங்களுக்கு இங்கிலாந்திலிருந்து பரிசுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்பிறகு குழந்தையின் தந்தை எனது மகள் பரிசு அனுப்புவதற்கு பதிலாக ரூபாய் 50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். அதை விடுவிப்பதற்காக வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டியும் அந்த நபர் கூறிய கணக்குகளில் 73 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதன்பிறகு மூதாட்டி தொடர்பு கொண்டபோது அந்த நபர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி ஊட்டி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஒரு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் மும்பையைச் சேர்ந்த விஷால் பாபா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டியிடம் இருந்து பெறப்பட்ட பணம் புதுடெல்லி, ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 15 பேருக்கு கை மாறியது தெரியவந்தது. இவர்கள் மும்பையில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இணையதளம் மூலமாக பணம் மோசடி  செய்யப்பட்டுள்ளது. இதில் 15,15,000 வரை பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களுக்கு  திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |