இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக அதிகமான அளவில் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் ரெட்அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நகர்புறங்களில் இரவு நேரங்களில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அதிக வெப்பநிலை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் கடந்த 2019 ஆம் வருடம் அதிகப்படியாக 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.