இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு கடந்த 2000-ம் ஆண்டில் தடை விதித்தது. இதனை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்ககம் சார்பில் இங்கிலாந்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேல்முறையீடு ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த போக் அமைப்பு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அதிகாரபூர்வமாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தத் உடன் இணைந்து குலுக்ககள் இன்னும் பல நாடுகளில் தீவிரமாக செயல்படுகின்றன என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் இலங்கை தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.