பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை ஆதரவை இழந்து போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா ஆவலுடன் இருக்கிறது. பிரிட்டனும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் ஆகும். இதனையடுத்து எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக இருக்கிறது. மேலும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.