பிரபல நாட்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரம் குறித்து வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் அதிபராகவும், கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவராகவும் போரிஸ் ஜான்சன் இருந்தார். இவர் மீது பல்வேறு விதமான ஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டதுடன், ஊழல் செய்யும் அமைச்சர்களை காப்பாற்றியதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் கட்சியிலிருந்து 58 மந்திரிகள் பதவி விலகினார்கள். இதன் காரணமாக அதிபர் போரில் ஜான்சனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த வியாழக்கிழமை போரில் ஜான்சன் அதிபர் பதவியில் இருந்து விலகியதோடு, கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறுவதோடு, அதிபர் பதவிக்கான தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடித்து அதிபர் தேர்தலில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன்படி அதிபர் தேர்தலுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதி மந்திரி ஆக பதவி வகித்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹண்ட், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், நைஜீரியா வம்சாவளியைச் சேர்ந்த கெமி பெடனாக், டாம் டுகெந்நாட், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட், ஈராக் வம்சா வழியைச் சேர்ந்த நதீம் ஜகாவி, அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மன் ஆகியோர் போட்டி இடுகின்றனர்.
இதனையடுத்து தற்போது புதிதாக வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். அதோடு கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.