Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து: பாலியல் வழக்கில் சிறை சென்ற இந்தியர்….. திடீரென இறப்பு…. வெளியான தகவல்…..!!!!!!

கேரளாவிலுள்ள ஒருகிராமத்தில் அரவிந்தன் பாலகிருஷ்ணன்(81) என்பவர் வசித்து வந்தார். இதையடுத்து இவர் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வளர்ந்த வந்த நிலையில், பின் 1963ம் வருடம் லண்டன் பொருளாதார பள்ளியில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். அந்த நாட்டில் சந்தா என்ற பெண்ணை சந்தித்து 1969ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சென்ற 2013ஆம் வருடம் தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்த தம்பதியின் வீட்டுக்கு ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். ஏனெனில் அவர் மீது 2 பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறியிருந்தனர்.
ஆனால் இதனை மறுத்த அரவிந்தன் நீதிபதியிடம்கூறியதாவது , தனது மீது பாலியல் இச்சையுடன் இருந்த இரு பொறாமைக்கார பெண்களுக்கு இடையில் இருந்த போட்டியின் மைய புள்ளியாக நான் இருந்தேன் என தெரிவித்துள்ளார். இதில் அரவிந்தன் லண்டனில் ரகசிய மாவோயிஸ்டு குழு ஒன்றை நடத்தி வந்து இருக்கிறார். அவரை பின்தொடர்ந்தவர்கள் தோழர் பாலா என்று அரவிந்தனை அழைத்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது. அவர் தன் மகளை 30 வருடங்களாக சிறைபிடித்து வைத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் அவரிடம் நடத்திய விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் பேசிய அவரது மகள், பயங்கர, மனிதநேயமற்ற மற்றும் தரம் தாழ்ந்த அடிப்படையில் இருந்தது என தன் சூழ்நிலையை விளக்கினார். வெளியுலகில் இருந்து அவரை பாதுகாக்கிறேன் என்று கூறி அதற்காக சிறை வைத்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு கொடூர சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறீர்கள் என நீதிபதி அவரை நோக்கி கடுமையாக சாடினார். அவரை (மகளை) ஒரு நபராக எண்ணாது ஒரு கருவியாக நடத்த முடிவு செய்துள்ளீர்கள் எனவும் கூறியுள்ளார்.
இதில் அரவிந்தன் மீது 2016ஆம் வருடம் 4 பாலியல் பலாத்காரம், 2 பேருக்கு உடல்ரீதியில் துன்பம் விளைவித்தல் மற்றும் 6 தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, விசாரணை முடிவில் இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு 23 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதனை தொடர்ந்து தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள டார்ட்மூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சென்ற 6 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர் நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்துள்ளார். இத்தகவலை சிறை சேவை துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |