Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்…? பலரின் ஆதரவு யாருக்கு…? இன்று மாலைக்குள் தெரியும் முடிவு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த ஐந்தாம் தேதி லீஸ் டிரஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து லீஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14ஆம் தேதி நீக்கப்பட்டு ஜெரமி ஹண்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்னால் உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா கடந்த 19ஆம் தேதி இரவில் திடீரென பதவி விலகியுள்ளார். இதன்பின் அரசில் தலைமை பதவி வகிக்கும் வெண்டி மோர்டன் மற்றும் துணை கொறடவான கிரெய்க் விட்டேக்கர் போன்ற பதவி விலகி விட்டனர் என்று கூறப்படுகிறது இதன் காரணமாக இங்கிலாந்து அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த இருபதாம் தேதி லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அவரது 44 நாட்கள் பிரதமர் பதவி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் போன்ற பல்வேறு காரணங்கள் பதவி விலகலுக்கு காரணங்களாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளது இந்த போட்டியில் முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சன் முன்னாள் நிதி மந்திரியான ரிஷி சுனக் போன்றோர் இருந்தனர். இருப்பினும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக போட்டியிலிருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.

ரிஷி சுனகிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்பி களின் ஆதரவு இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் பெண் தலைவரான பென்னி மார்டண்ட் என்பவரும் களமிறங்கியுள்ளார். அதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார் இந்த நிலையில் அங்கு அவருக்கு 29 எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது. இதனால் ரிஷி மற்றும் பென்னி மார்டண்ட் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிகள் இருக்கின்றனர். இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் பலரது ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். மேலும் இரண்டு பேர் போட்டியிடுகின்ற நிலையில் ஒருவேளை இணையவழி ஓட்டுப்பதிவுக்கான வாய்ப்பு ஏற்பட்டால் 1.70 லட்சம் பேர் அதற்கான வாக்குப்பதிவில் கலந்து கொள்வார்கள் அதற்கான முடிவு வரும் 28ஆம் தேதி தெரியவரும்.

Categories

Tech |