Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 2வது சுற்று தேர்தல்”…. வெற்றி பெற்றது யார்….?

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வாக்குபதிவில்  இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். முதல் வாக்குப்பதிவை 8 வேட்பாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் 2 பேர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

அந்த வகையில் ரிஷி சுனக் உட்பட 6 வேட்பாளர்கள் நேற்று இரண்டாவது சுற்று வாக்கு பதிவை எதிர்கொண்டுள்ளனர். இதில் ரிஷி 101 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |