Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டி”… ரிஷி சுனக்குடன் போட்டி போடுவது யார்?…. வெளியான தகவல்….!!!!!

இங்கிலாந்துநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவால் அடுத்த பிரதமர் பதவி போட்டி சூடுபிடித்து இருக்கிறது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே நடந்த முதல் இருகட்ட வாக்கெடுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக் முன்னிலை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ், முன்னாள் மந்திரி கெமி படேனோக், டாம் டுகெந்தெட் எம்.பி. போன்றோர் இருக்கின்றனர்.

அவர்கள் டெலிவிஷனில் தொடர் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் ரிஷி சுனக்குடன் நேருக்குநேர் களமிறங்குவதற்கான 2ஆம் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக லிஸ் டிரஸ்சுக்கும், பென்னி மோர்டான்டுக்கும் இடையேதான் 2வது இடத்துக்கு பலத்த போட்டி நிலவுவதாக லண்டனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |