இங்கிலாந்து ராணி உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் தனது 96 வயதில் உயிரிழந்தார். இவரின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் கடந்த 13ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மிஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நாளை நடைபெற உள்ள இறுதி சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். ராணியின் உடலுக்கு அவரது இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ அஞ்சலி செலுத்தினார். ஒரு மகன் மீதான உங்கள் அன்பு, இரக்கம், அக்கறை, நம்பிக்கை என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நாளை காலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்துக்கு வருகை தர உள்ளனர்.