3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளது. வரும் 8ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன் விளைவாக ஒயின் மோர்கன் தலைமையிலான அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மொத்த அணியும் மாற்றப்பட்டு, அந்த அணியில் இடம்பெறாத வீரர்களை கொண்ட புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 18 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.