Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் புயல்… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…!!!

இங்கிலாந்தை 70 மைல் வேகத்தில் புயல் புரட்டி எடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தைக் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் புயல் புரட்டிப்போட இருப்பது மட்டுமல்லாமல், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்க்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்று ஒரு சில இடங்களில் சில மணி நேரங்களிலேயே 50 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்தது. அது மட்டுமன்றி பல்வேறு இடங்களில் வீடுகளை பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், சாலைகள் மூடப் பட உள்ள நிலையில் பெரும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காமை சுற்றியுள்ள மையப் பகுதியில் சில இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், ஸ்காட்லாந்தின் பெரும்பாலான இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்திலேயே 25 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |