Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இங்குதான் சிறுத்தை இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்….!!

காட்டு பகுதியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமா தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக  அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் கன்று குட்டி ஒன்றை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது கிடந்துள்ளது. இதனை பார்த்து  வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |