கிராமத்திற்குள் புலி புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொளதாசபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக எஸ்டேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் பகுதியில் நேற்று மாலை புலி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் -அப்பில் அனைவருக்கும் அனுப்பியுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.