சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அய்யப்பன் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.