மாவட்ட பொது செயலாளர் தங்கபாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொது செயலாளர் தங்கப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மற்றும் ராஜபாளையத்தை அடுத்த 3-வது ரயில் நிலையமாக சங்கரன்கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களை விட அரசுக்கு அதிகமான வருவாய் கிடைக்கிறது.
ஆனால் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் போன்ற சிறப்பு ரயில்கள் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.