கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் வருகின்ற மே 31ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக மே 31(இன்று) ஒருநாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்கள் அனைத்து இருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர வெளி மாநிலங்களில் வசிக்கும் தொகுதி வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.