வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் துளசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசியம்மாள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம், நகை எதுவும் இருக்கிறதா என தேடி பார்த்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த துளசியம்மாள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து துளசியம்மாள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.