Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்கு குளுகுளு சீசன்லயும்… இப்படி ஒரு மழை… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இடி-மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது சில குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி இடி-மின்னலுடன் பலத்த மழை செய்தது.

மாலையில் பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து நீடித்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி பிரையண்ட் பூங்காவில் 87 மில்லி மீட்டரும், கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 56.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

Categories

Tech |