வீட்டு கழிப்பறையில் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த சோமச்சாய் என்பவர் சில தினங்களுக்கு முன் தன் வீட்டின் கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது அவரின் காலடியில் ஏதோ ஒன்று செல்வதுபோல் உணர்ந்துள்ளார். பின்னர் எழுந்து கீழே பார்த்த பிறகு கழிவறை கிண்ணத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே பாம்பை விரட்ட அருகிலிருந்த கிருமிநாசினி எடுத்து ஊற்றிள்ளார் ஆனால் பாம்பை விரட்ட இயலாததால் உடனே அவசர சேவைக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் வனத்துறையினர் வந்து பாம்பை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து சோமச்சாய் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் கழிவறைக்கு சென்றபோது காலடியில் உரசுவதை உணர்ந்தேன் என்றும் அதன் பிறகு தான் கீழே பார்த்தேன் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இருந்தது என்றும் கூறினார். மேலும் அது சரசரவென கழிவறையின் கிண்ணத்தில் சென்றதால் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் பின்னர் அவசர சேவையை தொடர்பு கொண்டேன் எனவும் கூறினார்.