Categories
மாநில செய்திகள்

இங்கு யாரவது அசுத்தப்படுத்தினால்…. ரூ.1 லட்சம் அபராதம்…. அதிரடி அறிவிப்பு…!!!

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் விதமாக மக்கள் செயல்படுவதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனுக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையரை உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில்  தனியார் மருத்துவ நிறுவனம் மருத்துவ கழிவுகளை அங்கு கொட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றை யாரவது கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |