டெல்லி மாநிலத்தில் பட்டாசுகளை சேமிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிக அதிக அளவில் உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் அடிக்கடி தலைநகரில் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசு காரணமாகவும் காற்று அசுத்தமாகி காற்று மாசடைகின்றது. காற்றின் தரம் குறைந்த நகரங்களில் பட்டியல்களில் எப்பொழுதும் டெல்லி முதன்மை இடத்தில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
पिछले 3 साल से दीवाली के समय दिल्ली के प्रदूषण की खतरनाक स्तिथि को देखते हुए पिछले साल की तरह इस बार भी हर प्रकार के पटाखों के भंडारण, बिक्री एवं उपयोग पर पूर्ण प्रतिबंध लगाया जा रहा है। जिससे लोगों की जिंदगी बचाई जा सके।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 15, 2021
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் பட்டாசு வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் பட்டாசுகளை சேமிக்க வேண்டாம். மக்கள் யாரும் பட்டாசுகளில் வீட்டில் சேமிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் தண்டனை விதிக்கப்படும்” என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.