ஆசிரியையை ஏமாற்றி நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேரி பிரேமா என்பவர் வசித்துவருகிறார். இவர் பாண்டேஸ்வரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுவத்தல் உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை உங்கள் கையில் இருக்கும் பையில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை கேட்டு பயந்து போன மேரி பிரேமா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி தன்னுடைய பையில் வைத்துள்ளார்.
அதன் பிறகு சிறிது தூரம் சென்ற பின் மேரி பிரேமா தன்னுடைய பையை பார்த்துள்ளார். அப்போது பையில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து தன்னுடன் பேசிக் கொண்டிருந்த அந்த 2 பேரும் தன் கவனத்தைத் திசை திருப்பி நகைகளை கொள்ளையடித்து சென்றது அவருக்கும் புரிந்தது. இதுகுறித்து மேரி பிரேமா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.