Categories
மாநில செய்திகள்

இங்கு விமான நிலையம் வேண்டாம்!…. கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்…. பரபரப்பு….!!!!

சென்னையின் புது 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலும் குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உட்பட 13 கிராம பகுதிகளில் இந்த புது விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக கொண்டு நிலம் எடுப்பதாக தகவல் பரவி இருப்பதால், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புது விமானம் நிலையம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து, கிராமமக்கள் தினசரி பல விதமான நூதன போரட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சென்ற 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தங்கள் எதிர்ப்பினை கிராமமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 63-வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு வேளையில், கைக் குழந்தைகள், குடும்பத்தாருடன் பெண்கள், முதியவர்கள் என சுமார் 300-க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடி இரவுநேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் புது விமானநிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடிகள் மற்றும் பதாகைகளை தங்களது கைகளில் ஏந்திக்கொண்டும், “விவசாயம் வேண்டும், விமான நிலையம் வேண்டாம், அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே, காப்போம்.. காப்போம் விவசாயத்தை காப்போம், எங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம்” என்றும் கோஷங்களை எழுப்பி அக்கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பரந்தூர் விமான நிலையம் தேவையில்லை என வலியுறுத்தும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற முதியவர்கள், பெண்கள் தங்களது ஊரைவிட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் எனவும் எங்களுக்கு விமான நிலையாம் வேண்டாம் எனவும் கூறி கண்ணீர்மல்க தங்களது தலைகளில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Categories

Tech |