Categories
தேசிய செய்திகள்

“இங்கு 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை”…? மத்திய தொலைதொடர்பு துறை அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5g சேவையை தொடங்கி வைத்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கினால் விமான கருவிகளில்கோளாறு ஏற்படும்.

இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது, விமான நிலையங்களின் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |