Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்று பவர் கட்”…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், தூதுகுடி, கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம், நகரக்குடி, குமாரக்குறிச்சி, அதிகரை, நெடுங்குளம், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |