மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளைநகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகசாமிநகர், நாட்டார் மங்கலம், நாகப்பன் சேவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.