துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு, கழனிவாசல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்ளிட்ட வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணியிலிருந்து மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.