துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சந்தம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எரிச்சநத்தம், குமிழங்குளம், அம்மாபட்டி, பாறைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, அக்கனாபுரம், கடையநேரி, அழகாபுரம், கோவிந்தநல்லூர், கோட்டையூர், கீழக்கோட்டையூர், சல்வார்பட்டி, அழகாபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.