மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை கூறியுள்ளார்.
மேலும் மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.