மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணினி பட்டா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதேபோல் கிலாமலை குரூப் தேற்பொகி,மெலச்செம் பொன்மாரி, ஊஞ்சனை, சுண்ணாம்புயிருப்பு, இளங்குடி, ஆலங்குளம், கத்தப்பட்டு, முள்ளியாரேந்தல், மேலப்பிடாரிசேரி, தண்டியமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் நாளை கணினி பட்டா சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது பட்டா தொடர்பான கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்