வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவாங்கர் கலைக் கல்லூரி, ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.எ.சி .ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம் எஸ் .எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, கலசலிங்கம் கலைக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வைத்து மாவட்டம் முழுவதும் பதிவான வாக்குகள் கொண்டு செல்லப்பட்டு 21 -ஆம் தேதி எண்ணப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்