Categories
உலக செய்திகள்

“இங்கேயும் நாங்கதான்”…. ஆஸ்கர் விருது வழங்கும் விழா…. தொகுப்பாளராக கலம் இறங்கிய மூன்று பெண்கள்….!!

முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் மார்ச் 27ஆம் தேதி 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை எப்போதும் நடைபெறும் வகையில் இல்லாமல் முதல் முறையாக மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை 1987 ம் ஆண்டுக்கு பிறகு மூன்று பெண்கள் ஒருங்கிணைந்து தொகுத்து வழங்க உள்ளார்கள்.

 

இந்த விழாவை தொகுத்து வழங்கும் 3 தொகுப்பாளர்கள் வாண்டா சைக்ஸ், எமி ஷுமர் மற்றும் ரெஜினா ஹால். இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படமான ‘ரைட்டிங் வீதி ஃபயர்’ திரைப்படம் சிறந்த ஆவணப்படம் (Best Documentary Feature) பிரிவிற்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சிறந்த படம்,  நடிகர், நடிகை, இயக்குனர்,  திரைக்கதை என 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதிகபட்சமான 12 பிரிவுகளில் ‘தி பவர் ஆப் தி Dog’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |