ராமநாதபுரத்தில் உள்ள திருவேட்டுடைய அய்யனார் கோவிலின் உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையடித்த 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டு பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மர்மநபர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய அந்த 2 நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து தெரியவந்துள்ளது.
மேலும் பொதுமக்கள் உடனந்தியாக எமனேஸ்வரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொதுமக்கள் பிடித்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தப்பியோடியது விருதுநகர் மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த நல்லூர் சேவகன்(30) என தெரியவந்துள்ளது. இந்நிலையில் உண்டியல் பணம் 12,000 திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.