பெங்களூரு அருகே உள்ள பிடதி என்ற இடத்தில் நித்தியானந்தா ஆசிரமம் அமைத்திருந்தார். மேலும் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், ஜாமீனில் வெளிவந்த பின் ‘கைலாசம்’ என்று, தானே பெயரிடப்பட்டுள்ள நாடு ஒன்றில், தற்போது தலைமறைவாக இருந்தபடி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறார்.
இந்த நிலையில் நித்தியானந்தா மீது மீண்டும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன்படி சாரா லேண்டரி என்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள பிடதி போலீசாருக்கு, இ-மெயிலில் புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்கள் சேர்ந்து அங்குள்ள பெண்களை அடித்து, துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் பலமுறை,எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறி உள்ளார். ஆனால் அந்த இ-மெயில் புகாரை பார்த்த பிடதி போலீசார் தரப்பில் கூறியுள்ளதாவது, இதுபோன்ற இ-மெயில் புகார்களை எங்களால் ஏற்க முடியாது. எனவே நீங்கள் எந்த அச்சமும் இல்லாமல், இந்தியாவின் ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளிக்குமாறு பதில் அனுப்பியுள்ளார்.