Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இங்கேயும் விற்பனை நடக்குதா…? ஓட்டல் உரிமையாளர் கைது… 2 கடைகளுக்கு சீல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தாபா ஓட்டல் உரிமையாளர்களை கைது செய்த போலீசார் 2 உணவகத்திற்கும் சீல் வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்துதமிழ்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திருச்செங்கோடு பகுதியிலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் திருச்செங்கோடு-பரமத்திவேலூருக்கு செல்லும் சாலையில் உள்ள தாபா உணவகத்தில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்ததில் ஓட்டலில் பதுக்கி வைத்திருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் ராஜாவை கைது செய்து உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர். இதேபோல் திருச்செங்கோடு-சங்ககிரி செல்லும் பகுதியில் உள்ள தாபா உணவகத்தில் மது விற்பனை செய்த அழகுராஜா என்பவரை கைது செய்த காவல்துறையினர் உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |