இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மிகவும் பயங்கரமான எல்லைகளில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையும் ஒன்று. எல்லைகளில் பலவிதமான போர்கள், சாகசங்கள் நடந்திருக்கிறது. இந்தநிலையில் டிசம்பர் 5 2011 அன்று இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டது. அத்துமீறி நுழைந்ததாக சிமியன் என்ற வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் தங்க வைக்கப்பட்டது.
ஒரு விலங்காக பார்க்கவில்லை. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உளவாளியாக பார்த்ததால் செய்துள்ளனர். எல்லை தாண்டிய விலங்குகள் கைது செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவல்ல. கடந்த ஆண்டு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறப்படும் ஒரு புறாவை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.