ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியிலிருந்த சங்கர் காரில் சிறுநீர் கழிக்க கூடாது என்று சொல்லியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கதம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் மாலை திரும்பி வந்த கதம் கையில் பெட்ரோலோடு வந்து ஷங்கர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார். எனவே சங்கர் பலத்த காயமடைந்ததால் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரான மகேந்திர பாலு கதமை கைது செய்து கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.