Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க அதிகமா சாகுபடி ஆகுது..! விலை கடும் வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தரி, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்காளி பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள உழவர்சந்தைக்கும், மண்டிக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி சில்லரை விற்பனையில் பழனி பகுதியில் தக்காளி கிலோ ரூ.4முதல் ரூ.6 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த மண்டியில் ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளி சேமித்து வைக்கும் குளிர்பதனகிடங்கு பழனி பகுதியில் அமைக்க வேண்டும். மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்கும் ஆலை தக்காளியில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறினர்.

Categories

Tech |