Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இதே வேலையா போச்சு… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளி சென்ற 2 டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே நரசிங்கபுரம் குட்டையாகுளம், ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள பெரியகுளம், சிறுமலை அடிவாரத்தில் உள்ள சில குளங்களில் இருந்து மணல் அனுமதி இல்லாமல் அள்ளி செல்லப்படுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு லாரிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் லாரிகளின் டிரைவர், காமன்பட்டியில் வசித்து வரும் காளிமுத்து, சக்கையநாயக்கனூர் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அனுமதி இல்லாமல் லாரிகளில் மணல் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற டிரைவர் இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |