சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யர்மலை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசித்து வரும் சிவா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 300 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்துவழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.