Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இங்க இந்த மாசத்துல “ஓசோன்” காற்று வீசும்..! குவிந்த சுற்றுலா பயணிகள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓசோன் காற்று வாங்க குவிந்தனர்.

செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தரங்கம்பாடி கடற்கரையில் “ஓசோன்” காற்று வீசும். இதனால் பலரும் குடும்பத்துடன் வந்து ஓசோன் காற்று வாங்கி மகிழ்ந்தனர். தரங்கம்பாடி கடற்கரையில் காவல்துறையினர், கடலோர காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் எல்லையான நண்டலாறு சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முககவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

Categories

Tech |