Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இங்க இருந்த கொடிக்கம்பத்தை காணோம்”…. போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்…. பெரும் பரபரப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கொடி கம்பத்தை வைத்துள்ளனர். இவர்களது கொடிக்கம்பம் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வருவாய் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதற்கு கட்சித்தொண்டர்கள் காணாமல் போன தங்களது கொடிக்கம்பத்தை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும், தங்கள் கொடிக்கம்பத்தை இந்த பகுதியில் வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அவ்வாறு எங்கள் கொடிக்கம்பத்தை வைக்க அனுமதி வழங்கவில்லை என்றால் இந்த பகுதியில் இருக்கும் மற்ற கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் உங்களது கொடிக்கம்பத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்த பேச்சு வார்த்தைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை கைது செய்து ஒரு பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Categories

Tech |