மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் தீபன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு தீபன் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அருணாசலம் என்பவர் கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த அருணாச்சலம் தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.