Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இவ்ளோ பேருக்கு மட்டுமே அனுமதி… மீறினால் நடவடிக்கை பாயும்… சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

திண்டுக்கல்லில் ஹோட்டல்கள், தியேட்டர்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். மேலும் நின்று கொண்டு செல்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணித்தனர். அதேபோல் ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகள் வைக்கப்பட்டது. இதற்கிடையே கடைகள், தனியார் நிறுவனங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை கடைப்பிடிக்காவிடில் அபராதம் வசூலிக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் “சீல்” வைக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |