தைவான் விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா ஏற்கனவே தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கருதி வருகிறது. இந்த நிலையில் அணுவாற்றலால் இயங்கும் தன்மைகொண்ட விமானம் தாங்கி கப்பல்கள் இரண்டை அமெரிக்க கடற்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கடற்பகுதிக்கு அனுப்பி திடீரென போர் பயிற்சியை நடத்தியது. அதேபோல் ஜப்பானிய போர் கப்பலும் அமெரிக்க போர் கப்பலுடன் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டது.
இது தைவான் நாட்டின் உள்விவகாரத்தில் சீனா தேவைல்லாமல் தலையிட வேண்டாம் என்றும் அந்நாட்டிடம் இருந்து ஒதுகிங்கியே இருங்கள் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாக பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சீனா தைவான் நாட்டுக்கு அருகில் வான்பரப்பில் ஜே 10, ஜே 16 வகையைச் சேர்ந்த 39 போர் விமானங்களை பறக்க விட்டுள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.