காரைக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி நகரில் அரசு அலுவலகங்கள், கடைகள், வீடுகள் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி காணாமல் போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை கழனிவாசல் பகுதியில் வசித்து வரும் அஸ்வின் என்பவர் தான் திருடினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அஸ்வினை கைது செய்தனர். அதன்பின் அவர் கொடுத்த தகவலின் பேரில் 6 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றினர்.