Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்க சிஸ்டம் சரியில்ல பா”… ரஜினி பாணியில் விமர்சித்த எச் ராஜா…!!!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 136 அடி இருந்தபோது தண்ணீரைத் திறந்துவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே விளக்கம் அளித்தார். தமிழக நீர்வளத் துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அங்கு இருந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விட்டுக்கொடுத்து விட்டார். அதற்கு அவர்  மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக மூத்த நிர்வாகி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எச் ராஜா சென்னையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்கதையாகி வருகிறது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மழைபெய்த அரைமணிநேரத்தில் வெள்ளம் வடிய தேவையான கால்வாய் வசதிகளை செய்ய வேண்டும். தற்போது சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பாணியில் விமர்சித்தார்.

 

Categories

Tech |